search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்றம் தேர்தல்"

    பாராளுநாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய லாலு பிரசாத்துக்கு அதிகாரம் அளித்து ராஷ்டிரீய ஜனதாதள கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #LaluPrasad #LokSabhaPolls
    பாட்னா:

    ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று நடந்தது. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

    இறுதியில் தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வை இறுதி செய்ய கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு அதிகாரம் அளித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்கும் அவருக்கே அதிகாரம் வழங்கப்பட்டது.

    கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லாலு பிரசாத் யாதவ், தற்போது உடல்நல கோளாறுக்காக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமரை தமிழகம் தீர்மானிக்கும் என்று கிறிஸ்துமஸ் விழாவில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

    நாகர்கோவில்:

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 21-வது கிறிஸ்துமஸ் விழா அருமனையில் நேற்று நடந்தது.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விழாவில் பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அவர், விழாவில் பேசியதாவது:-

    அருமனை கிறிஸ்துமஸ் விழா, மத நல்லிணக்க விழாவாக நடைபெறுகிறது. இதற்கு முன்பு இங்கு நடந்த விழாவில் பங்கேற்றபோது ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடந்தது. அப்போது அம்மாவின் உண்மையான தொண்டர்கள், எனக்கு ஆதரவு தருவார்கள் என்றும், இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவேன் என்றும் விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். அது உண்மையில் நடந்தது.

    இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நின்ற என்னை மக்கள் வெற்றி பெற வைத்தனர். அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செய்யும்.

    கன்னியாகுமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். மாற்றம் இங்கிருந்து வரவேண்டும். அதற்கு தமிழக மக்கள் முன் வர வேண்டும்.

    மதங்களின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்துபவர்களை புறக்கணிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. இங்கு மதசகிப்புத்தன்மை, சகோதரத்துவம் உள்ளது. இதனை துண்டாட சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்தை பேணிகாக்க வேண்டும்.

    ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக சிலர் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். வருகிற புத்தாண்டில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். இந்தியாவின் பிரதமரை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய கட்சிகளுக்கே ஆதரவு என்று கூறுகிறார்கள். தேசிய கட்சிகள் தமிழகத்தின் நலனில் நடுநிலையுடன் செயல்படுவதில்லை. காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினையில் இதனை நாம் கண் கூடாக பார்க்கிறோம். எனவே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாநில கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று அண்ணா கூறினார். அதனை செயல்படுத்தினால் தமிழகம் முன்னேறும். படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றாலும், முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நேற்று தேர்தல் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது.

    அடுத்த இடங்களில் நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பெனாசிர் பூட்டோ மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் உள்ளது.  

    272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 114 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 57 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

    இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை
    என்றும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நவாஸ் ஷரீப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், தேர்தலில் எவ்வித முறைககேடும் நடைபெறவில்லை. இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். 

    1996ல் கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை பொது தேர்தல்களில் பெரியளவில் வெற்றி பெறவில்லை. எனவே, தற்போது கிடைத்துள்ள வெற்றியை அந்த கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். #PakistanElection #ImranKhan
    பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போது சாத்தியம் இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார். #ChiefElectionCommissioner #parliament #election
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.

    அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வரும் 7ம் தேதி மற்றும் 8-ம் தேதி அனைத்துக் கட்சி பிரநிதிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பார்வையற்றோருக்கான பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். 

    அப்போது அவரிடம் பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டத்தில் இடமில்லை; சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான் இது சாத்தியம் எனக் கூறினார்.

    அரசியலமைப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின் படி தேர்தல் ஆணையம் செயல்படும். எனவே, தற்போதைய நிலையில் தேர்தலை தொடர்ந்து நடத்துவோம் என்றும் தேர்தல் ஆணையர் கூறினார்.  #ChiefElectionCommissioner #parliament #election
    ×